1 மணி நேரத்தில் 1 கோடி கொள்ளை!.. வங்கி கணக்கை ஹேக் செய்த கும்பல்...
சைபர் குற்றங்களை செய்யும் ஹேக்கர்ஸ் ஒருபக்கம் பொது மக்களை ஏமாற்றி, அவர்களிடம் ஆசையை தூண்டி ஒரு லின்க்கை அனுப்பி அதன் லின்க்கை கிளிக் செய்ய வைத்து அதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது நடந்து வருகிறது.
மறுபக்கம் வங்கிகளையே நேரடியாக ஹேக் செய்து வங்கி கணக்குகளில் இருந்தும் பணத்தை திருடுவது தற்போது துவங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கூட தமிழ்நாடு அரசு வங்கி கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி திருட்டு போனது. அந்த ரூ.22 கோடியும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமானது. இதில் நைஜீரிய கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்....
இந்நிலையில்தான், சென்னை பெருங்குடியில் உள்ள Bulkpe நிறுவனத்தின் வங்கி கணக்கை ஹேக் செய்து ஒரு மணி நேரத்தில் ஒரு கோடியை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது. 24 பரிவர்த்தனைகள் மூலம் நூதன முறையில் ஒரு கோடியை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.