ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தவான்: உலக கோப்பை தொடரில் இருந்து விலகல்

Last Updated: செவ்வாய், 11 ஜூன் 2019 (14:09 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷீகர் தவான் விலகியுள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சார்பாக விளையாடியவர் ஷீகர் தவான். கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷீகர் தவான் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஷீகர் தவான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 
ஷீகர் தவான் விளையாடியபோது கைகளில் காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து விளையாட்டு வீரர் ஷீகர் தவானுக்கு மருத்துவர்கள் 3 நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷீகர் தவான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷிகர் தவான் உலக கோப்பை போட்டிகளிலிருந்து விலகியுள்ள செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :