1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
  4. Newzland wins today match against sri lanka

அடித்து நொறுக்கிய நியூஸிலாந்து ஆடி போன இலங்கை

Cricket
இன்று நடைபெற்ற  ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இலங்கை-நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 29ஓவர் 2 பந்துகளில் 136 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்ததாக அதிரடியாக களம் இறங்கிய நியூஸிலாந்துக்கு 137 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது.

முதலில் களம் இறங்கிய மார்ட்டின் குப்டில், கோலின் மன்றோ அணியினர் கடைசி வரை தோற்காமல் அற்புதமாக விளையாடினர். மார்ட்டின் குட்பில இறங்கிய வேகத்திற்கு இலங்கை பந்துகளை பகாசுரன் போல் அடித்து பறக்கவிட்டார். இருவரும் ஆளுக்கொரு அரைசதத்தை அடித்ததுடன் 16 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து மேட்ச்சையும் முடித்தனர்.

மாலை 5.30க்கு பேட்டிங் இறங்கிய நியூஸிலாந்து சிங்கங்கள் வெறும் 2 மணி நேரத்திற்குள்ளாக மொத்த மேட்சையும் முடித்து இலங்கையை மண்ணை கவ்வ செய்தார்கள். இது இலங்கை ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தொடர்ச்சியாக அடிவாங்கும் ஆசிய அணிகள்: முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?