ஹாக்கியில் அசத்தும் இந்தியா:அரையிறுதிக்கு தகுதி

Last Updated: செவ்வாய், 11 ஜூன் 2019 (12:34 IST)
ஹாக்கி சீரிஸ் ஃபைனலஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி நேரடியாக முன்னேறியது.லீக் போட்டியில் 10-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது.


ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், சீரிஸ் ஃபைனல்ஸ் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் நேற்று ”ஏ” பிரிவு போட்டியில் இந்தியா உஸ்பெகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகள் மோதின. துவக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-0 என்ற கணக்கில் முதல் பாதியில் முன்னேறியது.

அதன் பின்பு இரண்டாவது பாதியில்,10-0 என்ற கணக்கில் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனால் நேரடியாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.

ஏற்கனவே ரஷ்யா போலாந்து போன்ற அணிகளை வீழ்த்திய இந்திய அணி, தற்போது உஸ்பெக்கிஸ்தானையும் வீழ்த்தியிருக்கிறதாக தெரிய வருகிறது.

எனவே இந்திய அணியின் இந்த வெற்றி, ஹாட்ரிக் வெற்றியாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :