உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

Last Modified ஞாயிறு, 9 ஜூன் 2019 (14:42 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 14வது போட்டி லண்டனில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத்கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இன்றைய இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு: தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, கே.எல்.ராகுல், தோனி, ஹர்திக் பாண்ட்யா, கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சஹால், மற்றும் பும்ரா

இன்றைய ஆஸ்திரேலிய அணியில், வார்னர், பின்ச், காவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், கார்ரே, கெளல்ட்டர் நைல், கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் ஜாம்பா
ஆஸ்திரேலியா இதுவரை இரண்டு போட்டிகளிலும் இந்தியா இதுவரை ஒரு போட்டியிலும் விளையாடி தோல்வியே காணாத அணிகளாக உள்ளன. ஆனால் இன்று ஒரு அணி தோல்வி அடைந்தே ஆகவேண்டிய நிலையில் தொடர் வெற்றி பெறும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :