இந்தியா vs ஆஸ்திரேலியா - உலகக்கோப்பைப் பலபரிட்சை !

Last Modified ஞாயிறு, 9 ஜூன் 2019 (10:10 IST)
உலகக்கோப்பைத் தொடரின் முக்கியமானப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோத இருக்கின்றன.

உலகக்கோப்பைத் தொடர் கடந்த மாதம் 30 ஆம் தேதியில் இருந்து நடந்து வருகின்றன. இதுவரை 12 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதையடுத்து 13 ஆவது போட்டியாக சமபலம் கொண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றன.

இந்த உலகக்கோப்பையில் இதுவரை இரு அணிகளும் இதுவரை தோல்வியை சந்திக்காமல் இதுவரை விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியா தனது இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தானையும் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேப்போல இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடனானப் போட்டியில் வென்றுள்ளது.

இரு அணிகளும் சமபலம் கொண்டுள்ளதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. இதுவரை இவ்விரு அணிகளும் உலகக்கோப்பையில் 11 முறை மோதியுள்ளன. அதில் 8 முறை ஆஸ்திரேலியாவும் 3 முறை இந்தியாவும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது.இதில் மேலும் படிக்கவும் :