உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை திணறல் ...அசத்தலான தொடக்கம் கொடுத்த இந்திய அணி !

india
Last Modified சனி, 6 ஜூலை 2019 (21:03 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று லீட்சில்  நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் நம் இந்திய அணியும், அண்டைநாடான இலங்கை அணியை எதிர்த்து களமிறங்கியது.
இப்போட்டியில் டாஸ் ஜெயித்த  இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில்  , திமுத் கருணரத்னே, குசால் பெராரா ஆகிய இருவரும்  தொடக்க ஆட்டக்காரர்களாக  களமிறங்கினர்.
 
இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம்  முதலே அபாரமாகப்  பந்து வீசி அசத்தி ரன்களை கட்டுக்குள் வைத்திருந்தனர்.
 
இதன் காரணத்தால் இலங்கை அணியினர் ரன்களை எடுக்கும் அதே சமயம் விக்கெட்டுகளையும் இழந்து வந்தனர்.அந்த அணியின் கருணரத்னே 10 ரன்னிலும், குசால் பெராரா 18 ரன்னிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 
 
இந்நிலையில்  இலங்கை அணி 55 ரன்கள் எடுப்பதற்குள்ளாக முக்கியமான நான்கு  விக்கெட்டுகளை இழந்து பரிதாப ஆடியது. 
 
இதனையடுத்து களத்தில் இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுடன் திரிமானே ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி இணைந்து 100 ரன்கள் சேர்த்தனர். 
 
இதில் அரை சதமடித்த திரிமானே 53 ரன்னில் அவுட்டாகி இலங்கை ரசிகர்களுகு ஏமாற்றம் அளித்தார்.. ஆனாலும் சிறப்பாக விளையாடி வந்த  மேத்யூஸ் அசத்தலாகச் சதமடித்து 113 ரன்னில் அவுட்டானார்.
 
50 ஓவரில் முடிவில் இலங்கை அணியானது 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து பேட்டிங் செய்யவுள்ள இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது
 
நம்  இந்திய அணியின் சார்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தி ஜொலித்தார். புவனேஷ்வர், குல்தீப், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்து இலங்களை அணியின் ரன் வீச்சை கட்டுப்படுத்தினர்.
 
தற்போது பேட்டின் செய்துவரும் இந்திய அணி 143 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகிறது.அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக களமிறங்கிய ராகுல் 67 ரன்களுடமும், ஷர்மா 78 ரன்களுடனும் களத்தில் விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :