1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 5 ஜனவரி 2025 (12:29 IST)

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட  பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.  இதனால் இந்திய அணிக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் கம்பீர் மற்றும் மூத்த வீரர் கோலி ஆகியோர் கடுமையான கண்டனங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய முன்னாள் இந்திய அணி வீரர் கவாஸ்கரிடம் “இந்தியா இந்த தொடருக்கு முன்பாக இன்னும் சில தொடர்களில் விளையாடி தயாராகி இருக்க வேண்டுமா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “ஏன் எங்களிடம் கேட்கிறீர்கள்? எங்களுக்கு கிரிக்கெட்டா தெரியும். நாங்கள் வெறும் தொலைக்காட்சிக்காக பேசுபவர்கள்தானே? எங்கள் பேச்சை எல்லாம் கவனிக்காதீர்கள். ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டுவிடுங்கள்” என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக ரோஹித் ஷர்மா “பேப்பரையும் பேனாவையும் வைத்துக் கொண்டு தொலைக்காட்சியில் விவாதிப்பவர்கள் எல்லாம் இந்திய அணியில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.