செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (10:18 IST)

ஒரே ஓவரில் 6 சிக்ஸ் அடித்தபோது….! – உண்மையை சொன்ன யுவராஜ் சிங்!

2007 உலககோப்பை டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தபோது நடந்த சில சம்பவங்களை பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியே கூறியுள்ளார் யுவராஜ்சிங்.

2007ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்தும், இந்தியாவும் மோதின. அப்போது பிரபல இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ராட் வீசிய பந்துகளை 6 முறை சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்தார் யுவராஜ்சிங்.

அதுகுறித்து தற்போது பேசியுள்ள அவர் ”அன்று முதலாவது ஆட்டத்தில் நான் பந்துவீசிய போது எனது 5 பந்துகளை தொடர்ச்சியாக மர்க்கரணாஸ் சிக்ஸர் அடித்திருந்தார். நான் பேட்டிங் செய்த போது எனக்கு பந்து வீசிய ப்ளிண்டாப்புடன் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் கூடுதல் உத்வேகத்தில் இருந்த நான் ஸ்டூவர்ட் ப்ராட் வீசிய அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடித்து விளாசினேன்” என்றார்.

மேலும் தனது அபாரமான ஆட்டத்தை பார்த்த ஸ்டூவர்ட் ப்ராட்டின் தந்தை கிறிஸ் ப்ராட் “ஏறக்குறைய எனது மகனது கிரிக்கெட் வாழ்க்கையை நீ முடித்துவிட்டாய். ஒரு பனியனில் கையெழுத்திட்டு தருவாயா?” என கேட்டதாகவும் கூறியுள்ளார்.