என்னை நீக்கியதற்கு ஸ்ரீகாந்த் சொன்ன காரணம் ஏற்கமுடியாதது! இர்பான் பதான் ஆதங்கம்!

Last Modified புதன், 22 ஏப்ரல் 2020 (11:01 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தான் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து தேர்வுக் குழுவில் இருந்த ஸ்ரீகாந்த் அளித்த பதில் அதிர்ச்சியளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்திய அணியில் 18 வயதிலேயே இடம்பெற்று ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு மைதானங்களிலேயே சிறப்பாக செயல்பட்டவர் இர்பன் பதான். இந்திய அணியின் நட்சத்திர பவுலராக திகழ்ந்த ஒரு கட்டத்தில் அணியில் இடம் கிடைக்காமல் தவித்தார். 2012 ஆம் ஆண்டு கடைசியாக விளையாடிய அவர் அதன் பின் இடம் கிடைக்காமல் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார்.

இப்போது தனக்கு அணியில் இடம் கிடைக்காதது குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் கடைசியாக 2012-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விளையாடினேன். அந்த போட்டியில் நான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அதன்பின் இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்கவே இல்லை. இந்நிலையில் எனக்கு அணியில் இடம் கிடைக்காதது குறித்து தேர்வுக்குழுவில் இருந்த ஸ்ரீகாந்த் தெரிவித்த கருத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவர் இர்பான் பதான் விக்கெட்டுக்களை வீழ்த்தவில்லை. பேட்ஸ்மேன்கள் அவர்களது விக்கெட்டுகளை கொடுக்கிறார்கள் என்றார்.
ஆனால் எதன் அடிப்படையில் அப்படி கூறினார் எனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :