தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற சச்சின் …வைரலாகும் புகைப்படம் !

sachin
Sinoj| Last Updated: வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (18:18 IST)

மாஸ்டர் பேட்ஸ்மேன் என அழைக்கப்படும் சச்சின் அழைக்கப்படும் சச்சின் இன்று தனது 43 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எனவே அவர் தனது தாயிடன் ஆசிர்வாதம் பெரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டிகள் உலக கிரிக்கெட் வீர்களில் தலைசிறந்தவர் என போற்றப்படுகிறார்.

எனவே, தனது 47 பிறந்த நாளை முன்னிட்டு, தன் இல்லத்தில் அவரது தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இதுசம்பந்தமான புகைப்படத்தை சச்சின் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார், இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.


மேலும் வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பலரும் பசி , பட்டிணியால் வாடுகின்றனர்.

பல அறக்கட்டளைகள், நடிகர், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்கள் மக்களுக்கும் அரசு நிவாரணத்திற்கும் உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வருடம் தனது பிறந்த நாளை கொண்டாவில்லை எனவும் கொரோனாவுக்கு எதிரான போராடும் மருத்துவர்கள்,செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் என அனைவரையும் கௌரவிக்கும் விதமாக நான் இந்த வருடம் எனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :