வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (17:58 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் வெளியீடு.! நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு..!!

ICC Test
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ளது. இதில், நியூசிலாந்து அணி புள்ளிபட்டியலில் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.  
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது.  இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  வெளியிட்டுள்ளது. 
 
இதில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை அணி (55.56 சதவீதம்) 3வது இடத்தில் தொடர்கிறது. தொடரில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி (37.50 சதவீதம்) 4வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. 
 
இந்தப்பட்டியலில் முதல் இரு இடங்களில் இந்தியா (71.67 சதவீதம்), ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) அணிகள் உள்ளன. 3வது இடத்தில் அணி (55.56 சதவீதம்), 4வது இடத்தில் இங்கிலாந்தும் (42.19 சதவீதம்), 5வது இடத்தில் வங்காளதேசமும் (39.29 சதவீதம்), 6வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும் (38.89 சதவீதம்) உள்ளன. 
 
மேலும், 7வது இடத்தில் நியூசிலாந்து அணி (37.50 சதவீதம்), 8 மற்றும் 9வது இடங்களில் முறையே பாகிஸ்தான் (19.05 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.