திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 25 ஜூலை 2024 (15:41 IST)

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.! முக்கிய வீரர் விலகல்.! இலங்கை அணிக்கு பின்னடைவு..!!

Srilanka Player
காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டி20  தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா விலகினார்.
 
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் நாளை மறுநாள் பல்லேகலேவில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பயிற்சி மேற்கொள்ளும்போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவிற்கு இடது கையில் கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகினார். ஏற்கனவே காயம் காரணமாக துஷ்மந்த சமீரா தொடரிலிருந்து விலகிய நிலையில் நுவான் துஷாராவும் விலகியது இலங்கை அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  நுவான் துஷாராவிற்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


மதுஷங்கா கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 3வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.