திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (19:40 IST)

பாஜகவில் இணைகிறாரா சம்பயி சோரன்? ஜார்கண்ட் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு!

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர்  சம்பயி சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய  இருப்பதாக கூறப்படும் நிலையில் ஜார்கண்ட் ஆளும் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர்  சம்பயி சோரன் இது குறித்து கூறிய போது ’கட்சியில் தனக்குரிய மரியாதை அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் பல்வேறு அவமானங்களை சந்தித்து விட்டதாகவும் இதனால் மாற்று பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

என் அரசியல் வாழ்வில் இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்றும் நான் அரசியலில் இருந்து விலகலாம், தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் அல்லது வேறு கட்சியில் இணையலாம்  என்ற மூன்று வழிகள் தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த மூன்றில் நான் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்று அவர் கூறியிருப்பதை அடுத்து அநேகமாக அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சம்பயி சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தால் ஜார்கண்ட் ஆளும் கட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva