தொடர்புடைய செய்திகள்
- நல்ல தொடக்கத்துக்குப் பிறகு சரியும் ஆஸி… 4 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர்கள்!
- கிரிக்கெட்: இந்தியாவை சோதித்த ஆஸ்திரேலியா - மைதானத்துக்கு ஆஸி. பிரதமருடன் வந்த நரேந்திர மோதி
- 18 ஆம் நம்பர் ஜெர்சியின் கதையை சொன்ன கோலி…!
- கோலிக்கும் எனக்கும் பந்துவீசுவது கடினம்தான்… டு பிளஸ்சி சொன்ன சூப்பர் மேட்டர்!
- நேற்று ஒரே இன்னிங்சில் 4 சாதனைகளை படைத்த கிங் கோலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: கோப்பையை வெளியிட்ட ஆஸ்., முன்னாள் கேப்டன்!
உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
இந்த இறுதிபோட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் விபரம் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த அணியின் கேப்டனாக பேட் கம்மிங்ஸ் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, பிசிசிஐ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.
இந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி கவுன்சிலின் எந்தக் கோப்பையையும் வெல்லாத இந்திய அணி டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்று கோப்பை வெல்லும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு வழங்கப்படவுள்ள கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இன்று வெளியிட்டுள்ளார்.
The Test Mace
அடுத்த கட்டுரையில்