கோலிக்கும் எனக்கும் பந்துவீசுவது கடினம்தான்… டு பிளஸ்சி சொன்ன சூப்பர் மேட்டர்!
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. கிளாசன் மிக அபாரமாக விளையாட 104 ரன்கள் எடுத்தார். அதேபோல் 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி த்து வெற்றி பெற்றது. இதில் விராத் கோலி 63 பந்துகளில் அபாரமாக சதம் அடித்தார்.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கோலியும் டு பிளஸ்சியும் விக்கெட் இழக்காமல் 172 ரன்கள் சேர்த்தனர். இந்த சீசனில் அவர்கள் இருவரும் சேர்ந்து 800 ரன்கள் சேர்த்துள்ளனர். போட்டி முடிந்ததும் பேசிய ஆர் சி பி கேப்டன் ஃபாஃப் டு பிளஸ்சி “இது ஒரு அற்புதமான சேஸ். நானும் கோலியும் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நண்பர்கள். நாங்கள் ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்துகொள்கிறோம். நாங்கள் இருவரும் மைதானத்தின் வெவ்வேறு பகுதிகளில் பந்துகளை அடிக்கிறோம். அதனால் எங்களுக்கு பந்து வீசுவது கடினமானதுதான்” எனக் கூறியுள்ளார்.