1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (19:07 IST)

வாழ்வா? சாவா? முக்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான்.. பிளே ஆப் வாய்ப்பு யாருக்கு?

Rajasthan Royals
இன்று நடைபெறும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் நூலிழை பிளே ஆப் வாய்ப்பு இருப்பதை அடுத்து அந்த அணிக்கு இந்த போட்டி வாழ்வா சாவா என்ற போட்டியாக கருதப்படும். 
 
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்று, மும்பை மற்றும் பெங்களூர் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆப் செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களம் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran