1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli talked about his 18th number jersey secret

18 ஆம் நம்பர் ஜெர்சியின் கதையை சொன்ன கோலி…!

கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி, தன்னுடைய ஜெர்ஸிக்களில் 18 ஆம் நம்பரை பயன்படுத்தி வருகிறார். அவருக்கு இப்போது ஒரு அடையாளம் போல ஆகிவிட்டது 18 ஆம் எண். இந்நிலையில் 18 என்ற அந்த நம்பரை தான் கேட்டு வாங்கவில்லை என்றும் அவர்களாகவே கொடுத்தது என்றும் கோலி கூறியுள்ளார்.

மேலும் பேசியுள்ள அவர் “இப்போது 18 என் வாழ்வின் ஒரு அங்கமாக அமைந்துவிட்டது. 18 ஆம் தேதியில் என் வாழ்க்கையில் தந்தை மரணம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளன.” எனக் கூறியுள்ளார். நேற்று கூட 18 ஆம் தேதியில் நடந்த போட்டியில் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்
கோலிக்கும் எனக்கும் பந்துவீசுவது கடினம்தான்… டு பிளஸ்சி சொன்ன சூப்பர் மேட்டர்!