செவ்வாய், 5 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (12:58 IST)

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

Pakistan team wc
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான  பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரை காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

உலகக் கோப்பை இந்தியாவில்  நடக்க உள்ளதால் போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு அருகில் உள்ள ஓட்டல்கள், மேன்சன்கள் புக்கிங் ஆகிவரும் நிலையில், சமீபத்தில் ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான தீம் பாடல் வெளியானது. 

இந்த நிலையில்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான  பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பாபர் ஆசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட  அணியில், பாபர் அசாம், ஷதாப் கான்,  பகர் ஜமான், இமாம், அப்துல்லா, ரிஸ்வான், இப்திகார், ஆகா சல்மான், அவுத் ஷகீல், நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, ராஃப், ஹான் அலி, உஸ்மா மிர், வாசின் ஜே ஆர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்..

இத்தொடரில், காயம்  காரணமாக  அந்த அனியின் நட்சத்திர வீரர பந்துவீச்சாளர் நசீம் ஷா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.