1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (10:55 IST)

மீண்டும் ஒருநாள் தொடரில் அஷ்வின்; அவருக்கு வலிமை தேவையில்ல! – ரோகித் சர்மா கருத்து!

ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளது குறித்து ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கடந்த பல ஒருநாள் போட்டிகளில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறாமலே இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தியா ஸ்குவாடில் அவர் இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா “ரவிச்சந்திரன் அஷ்வின் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் மிக்கவர். ஒருநாள் போட்டிகளில் அண்மையில் விளையாடியதில்லை என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அவரை போன்றவருக்கு உடல் வலிமையை விட திறமைதான் பலம்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K