1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Will hardhik take over captaincy from rohith sharma

இலங்கை டி 20 தொடரில் ஹர்திக் பாண்ட்யாதான் கேப்டனா? சர்ச்சையைக் கிளப்பிய விளம்பரம்!

சேத்தன் சர்மா
உலகக்கோப்பை தொடரை அரையிறுதியில் இருந்து தோற்று வெளியேறிய பின்னர் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் டி 20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணி அடுத்து இலங்கையோடு ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் டி 20 போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவாரா இல்லை ரோஹித் ஷர்மா செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இப்போது இந்த தொடரை ஒளிபரப்ப உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஹர்திக் பாண்ட்யாவை வைத்து விளம்பரங்களை ஒளிபரப்பி வருகிறது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவே கேப்டனாக செயல்படுவார் என்று தோன்றுகிறது. இந்த தொடருக்கான அணியை இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: 100வது போட்டியில் சதம்அடித்த வார்னர்!