வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2022 (08:00 IST)

இந்தியாவை சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து தாக்கும்: ராகுல் காந்தி

rahul
இந்தியாவை சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து தாக்கும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய ஒற்றுமை பயணத்தை நடத்தி வரும் ராகுல் காந்தி அவ்வப்போது சீனா குறித்து சில தகவல்களை தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் தற்போது டெல்லியில் அவர் தனது பயணத்தை நடத்தி வரும் நிலையில் இந்தியாவுடன் போர் வந்தால் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து தாக்கும் என்றும் எனவே எல்லை பாதுகாப்பில் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
அவரது இந்த எச்சரிக்கையை அடுத்து மத்திய அரசு இந்த விஷயத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva