வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (09:33 IST)

2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த Cuisine – இந்தியாவுக்கு 5ஆம் இடம்!!!

2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த உணவு வகைகளின் உலகளாவிய பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.


டேஸ்ட் அட்லஸ் நடத்திய கருத்து கணிப்பில் பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான வாக்குகளின் அடிப்படையில் தரவரிசை 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த உணவு வகை கொண்ட நாடு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இத்தாலியின் உணவுகள் முதல் இடத்தைப் பிடித்தன, அதைத் தொடர்ந்து கிரீஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளன.

இந்தியா 4.54 புள்ளிகளைப் பெற்றுள்ளது மற்றும் நாட்டின் சிறந்த மதிப்பிடப்பட்ட உணவுகளில் கரம் மசாலா, மலாய், நெய், வெண்ணெய் பூண்டு நான், கீமா ஆகியவை அடங்கும் என்று மதிப்பீடு தெரிவித்துள்ளது. பட்டியலில் மொத்தம் 460 உணவு ஐட்டம் உள்ளன. மேலும், இந்திய உணவு வகைகளை ருசிக்க சிறந்த உணவகங்கள் ஸ்ரீ தாகர் போஜனலே (மும்பை), காரவல்லி (பெங்களூரு), புகாரா (புது டெல்லி), டம் புக்த் (புது டெல்லி), கொமோரின் (குருகிராம்) மற்றும் 450 உணவகங்களாகும்.

ஜப்பான், அமெரிக்கா, துருக்கி, பிரான்ஸ் மற்றும் பெரு ஆகியவை சிறந்த உணவு வகைகளைக் கொண்ட முதல் 10 நாடுகளில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், உலகின் மிகவும் பிரபலமான சீன உணவு வகை, பட்டியலில் 11 வது இடத்தைப் பிடித்தது. பட்டியலுடன் கூடிய இந்த ட்வீட் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.

இது 15,000 கமெண்டுகளுடன் 36 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. பட்டியல் அதன் தரவரிசையை நியாயப்படுத்தவில்லை என்று பலர் கருதுகின்றனர்.