1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மே 2023 (15:33 IST)

கண்டிப்பா இந்த டீம்தான் கப் அடிக்கும்..! – கிரிக்கெட் வீரர்கள் கருத்து என்ன?

CSK vs GT
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று கிரிக்கெட் பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.



நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. கடந்த ஆண்டு கோப்பை வென்ற நடப்பு சாம்பியனான குஜராத் அணி இந்த முறையும் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. குஜராத் அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே நல்ல ஃபார்மில் உள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு அணியில் எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களுமே கணித்து வருகின்றனர். இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் “மும்பை அணிக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என மனம் ஏங்குகிறது. ஆனால் குஜராத் அணியும் வலுவான ஒரு அணிதான்” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் சிஎஸ்கே அணி வீரரான பாப் டூ ப்ளெசிஸ், ஸ்ரீசாந்த் மற்றும் ஹெய்டன் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், பீட்டர்சன் ஆகியோர் குஜராத் அணியே கோப்பையை வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் ஆதரவாக இரு அணி ரசிகர்களுமே சமூக வலைதளங்களில் ஆதரவு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K