செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மே 2023 (08:45 IST)

தோல்வியில் தொடங்கி வெற்றியில் முடிக்குமா சிஎஸ்கே? – CSK vs GT இறுதி மோதல்!

CSK vs GT
நடப்பாண்டு ஐபிஎல் சீசனின் இறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில் இந்த போட்டியில் சிஎஸ்கே வெல்லுமா? குஜராத் டைட்டன்ஸ் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. கடந்த ஆண்டு கோப்பை வென்ற நடப்பு சாம்பியனான குஜராத் அணி இந்த முறையும் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. குஜராத் அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே நல்ல ஃபார்மில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2019ல் கோப்பையை வென்ற பிறகு மீண்டும் கோப்பை வெல்லவில்லை. இந்த முறை இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பை வென்றால் 5 முறை சாம்பியன்ஷிப் பெற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாறும். இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சிஎஸ்கே சமன் செய்யும் என்பதால் சிஎஸ்கே ஜெயிக்க வேண்டும் என மஞ்சள் படை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இன்று 7.30 மணிக்கு இந்த போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் முதல் போட்டியில் இதே மைதானத்தில் குஜராத்திடம் தோல்வியில் போட்டியை தொடங்கிய சிஎஸ்கே வெற்றியில் முடிக்குமா? அல்லது குஜராத் தனது இரண்டாவது முறை கோப்பையை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K