1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

ஜடேஜாவுக்கு பிடித்த தமிழ் பாடல் இதுதானா? அஸ்வின் பகிர்ந்த தகவல்!

சிஎஸ்கே அணியின் சொத்துகளில் ஒருவர் என்றே ரவிந்தர ஜடேஜாவை சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு சென்னை அணிக்கு பெரும் சேவை செய்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. இந்நிலையில் ஜடேஜாவுக்கு பிடித்த தமிழ் பாடல் என்னவென்று தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் “நான் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது பெரும்பாலும், தமிழ்ப் பாடல்களையே கேட்பேன். அப்போது நான் போட்டிருந்த ஒரு பாடல் ஜடேஜாவுக்கு மிகவும் பிடித்துப் போய் அந்த பாடலை திரும்ப போட சொன்னார். அந்த பாடல் விஜயகாந்த் நடிப்பில் உருவான வானத்தைப் போல படத்தில் இடம்பெற்ற ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல்தான்” என்று சீக்ரெட் பகிர்ந்துள்ளார்.