ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 மே 2023 (23:25 IST)

ஸ்லோவேவியா ஓபன் பேட்மிண்டன் - சமீர் வர்மா தங்கம் வென்று சாதனை

sameer varma
ஸ்லோவேனியாவில்  உள்ள மரிபோர் நகரில் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர் சமீர் வர்மா தங்கம் வென்றார். இவர்,  தைவான் நாட்டைச் சேர்ந்த சூ லீ யாங் என்ற வீரரை 21-19ம் 21-12 என்ற நேர்செட்களில் வென்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவில் ரோகன் கபூர் –சிக்கி ரெட்டி ஜோடி டென்மார்க் ஜோடியுடன் அரையிறுதியில்  மோதியது. 21-15, 21-19 என்ற செட்கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இருப்பினும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மற்றொரு ஜோடியிடம் தோற்றது.