1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Washington sundar innings in Rajkot getting slashed by fans

இதெல்லாம் என்ன வியூகம்… கம்பீர் & சூர்யகுமாரை விளாசும் ரசிகர்கள்!

இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வென்ற நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி  26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் சேர்த்தது.  அந்த அணியின் பெக்கட் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறப்பாக விளையாடி முறையே 51 மற்றும் 43 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி மிகச்சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கோடு இந்திய அணி ஆடிய நிலையில் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல இந்திய அணியின் பேட்டிங் வியூகமும் மோசமாக இருந்தது. பவுலரான வாஷிங்டன் சுந்தரை ஆறாவது பேட்ஸ்மேனாக அனுப்பினர். அவர் 15 பந்துகள் சந்தித்து 6 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட்டானார். அதனால் இந்திய அணியின் தேவைப்படும் ரன்விகிதம் மளமளவென உயர்ந்தது. ஆனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல் எட்டாவது பேட்ஸ்மேனாகக் களமிறக்கப்பட்டார். ஏன் இப்படி ஒரு மோசமான வியூகம் என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
About Writer
vinoth