வியாழன், 6 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 28 ஜனவரி 2025 (10:43 IST)

உலகின் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகள் பட்டியல்.. முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஒரே ஒரு வங்கி..!

உலகில் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகள் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அதில் இந்தியாவை சேர்ந்த ஸ்டேட் வங்கி மட்டுமே முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் வங்கிகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து கருத்துக்கணிப்பு அமெரிக்காவின் நியூஸ் இதழ் எடுத்த நிலையில் இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் முதல் 10 இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி உள்ளது.

சொத்து விகிதம், மொத்த கடன், டெபாசிட் விகிதம், சந்தை பங்களிப்பு ஆகியவற்றையில் மிகவும் வலுவானதாக ஸ்டேட் வங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் உள்ள 66 முன்னணி வங்கிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் ஸ்டேட் வங்கி இதில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. உலகில் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகள் பட்டியலில்  முதல் 10 இடங்களை பிடித்த வங்கிகளின் பட்டியல் இதோ

1.பேங்க் பி.சி.ஏ., - இந்தோனேஷியா

2.டி.பி.எஸ்., குரூப் - சிங்கப்பூர்

3.பான்கோ தோ பிரேசில் - பிரேசில்

4.எஸ்.பி.ஐ., - இந்தியா

5.பேனர் பேங்க் - அமெரிக்கா

6.டொரண்டோ டொமினியன் - கனடா

7.யுனைடெட் பேங்க் - அமெரிக்கா

8.லாயிட்ஸ் பேங்கிங் - பிரிட்டன்

9.எம் பேங்க் - போலந்து

10.எஸ்.என்.பி., - ஸ்விட்சர்லாந்து

Edited by Mahendran