தொடர்புடைய செய்திகள்
- இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!
- எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!
- சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?
- இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!
- ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!
இது ஒரு அணியே கிடையாது… வீரர்களுக்குள் ஆதரவே இல்லை- பாக் பயிற்சியாளர் புலம்பல்!
நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும் தோற்றது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது. அணிக்குள் வீரர்கள் பாபர், ரிஸ்வான் மற்றும் ஷாகீன் அப்ரிடி ஆகியோரின் தலைமையில் குழுவாக பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் “பாகிஸ்தான் அணிக்குள் ஒற்றுமையே இல்லை. இது ஒரு அணியே கிடையாது. வீரர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில்லை. அனைவரும் தனித்தனியாக உள்ளனர். எத்தனையோ அணிகளோடு பணியாற்றியுள்ளேன். ஆனால் இதுபோல ஒரு அணியை நான் பார்த்ததில்லை” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்