வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (18:30 IST)

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி விளையாடிய மூன்று போட்டிகளிலும் சேர்த்து 5 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.  அமெரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இது அவர் மேல் கடுமையான விமர்சனங்களை எழவைத்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கோலியின் ஃபார்ம் குறித்து பேசியுள்ளார். அதில் “கோலி ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் சில போட்டிகளில் சீக்கிரமே அவுட் ஆனதால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. இதுவும் ஒருவகையில் நல்லதுதான். ஏனென்றால் அவர் இன்னும் கவனமாக விளையாடுவார்” எனக் கூறியுள்ளார்.

இதே போன்ற கருத்தையே இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரும் தெரிவித்துள்ளார். அவர், “நியுயார்க் மைதானத்தில் கோலி மட்டுமில்லை, வேறு யாருமே பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டிகள் தொடங்கும் போது இன்னும் அழுத்தம் அதிகமாகும். அப்போது கோலியிடம் இருந்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வரும் என நான் நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார்.