1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Gambhir will be interviewed today by bcci officials

இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு… கம்பீருக்கு இன்று சம்பிரதாய நேர்காணல்!

கோலி
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆவது குறித்து பேசியு கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று அவருக்கான நேர்காணல் காணொளி மூலமாக நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கம்பீர்தான் அடுத்த பயிற்சியாளர் என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் இந்த நேர்காணலானது சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கும் என தெரிகிறது. 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் சம்பளம்… ஒரே படத்தில் உச்சத்துக்கு சென்ற ராஷ்மிகா!