புதன், 6 டிசம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2023 (15:50 IST)

சி எஸ் கே அணிக்கு நல்ல செய்தி… முழு உடல்தகுதியுடன் திரும்பும் வீரர்!

சென்னை அணிக்காக 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் தீபக் சஹார். ஆனால் கடந்த ஆண்டு காயம் காரணமாக தீபக் சஹார் தொடர் முழுவதும் பங்கேற்கவில்லை. இது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் தனித்துவம் மிக்கவராக தீபக் சஹார் செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு சென்னை அணியின் மோசமான தோல்விக்கு தீபக் சஹார் இல்லாததும் ஒரு காரணமாக அமைந்தது என்று கூறலாம். இந்நிலையில் இப்போது 100 சதவீத உடல்தகுதியோடு தான் இருப்பதாக தீபக் சஹார் கூறியுள்ளார்.

காயங்களில் இருந்து மீள கடந்த 3 மாதங்களாக கடுமையாக உழைத்துள்ள அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக முழு தகுதியுடன் தயாராகி வருவதாகக் கூறியுள்ளார்.