திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2023 (08:33 IST)

பெண் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா? சி எஸ் கே அணிக்கு பெரும் அதிர்ச்சி!

சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் கடைசி சில ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இருந்தார் பென்ஸ்டோக்ஸ். கடந்த சில ஆண்டுகளாக அவர் வெளிப்படுத்தி வரும் ஆல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸை அடுத்து அவரை அனைத்து அணிகளும் ஏலத்தில் எடுக்க ஆரவம் காட்டின. அவரை சென்னை அணி 16.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் பென் ஸ்டோக்ஸும் ஒருவர்.

இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டித் தொடரில் சென்னை அணி மிக வலுவாக உள்ளது. மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் போட்டிகள் நடக்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ், தேசிய அணியின் போட்டிகளுக்கு தயாராவதற்காக ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.