1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Virat kohli new ad video went contraversy

கோஹ்லியின் செயலால் கடுப்பான ரசிகர்கள்… கமெண்ட்ஸில் காட்டமான கமெண்ட்கள்!

கபில்தேவ்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று கவனம் ஈர்த்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் போட்டிகளிலும் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் கோஹ்லி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அவரை அணியில் இருந்து நீக்கவேண்டுமென கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் விராட் கோஹ்லி தற்போது டிவிட்டரில் ஒரு நிறுவனத்துக்கான விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் பார்ம் அவுட் நேரத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் தேவையா என ரசிகர்கள் பலரும் கோபமாக அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 
அடுத்த கட்டுரையில்
கிரிக்கெட்டில் களமிறங்கினார் முத்தையா முரளிதரன் மகன்!