பாபர் அசாம், விராட் கோலியைத் தாண்டி ரன்கள் எடுப்பார்… பாக். வீரர் கணிப்பு!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு இது போதாத காலமாக அமைந்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை கடந்த ஆண்டு துறந்தார் விராட் கோலி. ஆனால் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் பேட்டிங் சற்று தடுமாற்றத்தில் இருந்தது. இதுவரை 70 சதங்களை அடித்துள்ள அவர் 71 ஆவது சதமடிக்க 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்.
இந்நிலையில் அவர் மீதான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் கோஹ்லியை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் “கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் போது பாபர் அசாம் விராட் கோலியை விட அதிக ரன்கள் சேர்த்திருப்பார்” என்று கூறியுள்ளார்.