தொடர்புடைய செய்திகள்
- டக் அவுட் ஆன விராட் கோலி….
- திமுக ஐடி விங் பணியை ராஜினாமா செய்தது ஏன்: பிடிஆர் விளக்கம்
- திமுக ஐடி விங் புதிய செயலாளர் அறிவிப்பு: பிடிஆர் ராஜினாமா ஏற்பு!
- ரோஹித் கோலிக்கு சரியான மாற்று அல்ல - சுனில் கவாஸ்கர்
- விராட் கோலி கிரிக்கெட் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக பட்டியலிட்ட காரணங்கள் - ரசிகர்கள் கவலை
விராட் கோலியின் முடிவு சரிதான்… பாகிஸ்தான் வீரர் ஆதரவு!
இந்திய அணியின் கேப்டனாக இருந்த கோலி கடந்த 5 மாதங்களில் அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.
இந்திய அணியின் முன்னால் கேப்டன் கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே எழுந்த ஈகோ மோதலின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே நீரு பூத்த நெருப்பாக புகைந்து வந்தது. இந்நிலையில் இப்போது அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பேட்டிங் திறன் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ஆதாரவு தெரிவித்துள்ளார். அதில் கோலியின் முடிவை நான் ஆதரிக்கிறேன். அவர் போதுமான அளவு சிறப்பான கிரிக்கெட் விளையாடி அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் அழுத்தம் அதிகமாகும் போது அது பேட்டிங் திறனை பாதிக்கவே செய்யும். இப்போது அவர் தனது பேட்டிங்கை மகிழ்ச்சிகரமாக விளையாட வேண்டிய நேரம் எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்