1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Vengadesh ayyar is a rajinikanth fan

நான் எப்பவுமே ரஜினி ரசிகன்.. என் வழி தனி வழி! – தெறிக்கவிட்ட வெங்கடேஷ் அய்யர்!

IPL
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றும் அபாரமாக விளையாடி வரும் வெங்கடேஷ் அய்யர் தான் ஒரு ரஜினி ரசிகன் என தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இதில் கொல்கத்தா அணியில் 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக வலம் வந்த வெங்கடேஷ் அய்யர் அனைவராலும் உற்று நோக்கப்பட்டார்.

மத்திய பிரதேச மாநில அணியில் இருந்து வரும் வெங்கடேஷ் அய்யர் ஐபிஎல்லில் விளையாடுவது இதுவே முதல்முறை. ஆனால் இந்திய அணியில் இவர் ஆல் ரவுண்டராக இணைய வாய்ப்புள்ளது என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கடேஷ் அய்யர் தான் ஒரு ரஜினி ரசிகன் எனவும், என் வழி தனி வழி என ரஜினி பட வசனத்தையும் பேசியது வைரலாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்த ஜார்வோவுக்கு வாழ்நாள் தடை!