செவ்வாய், 5 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (09:31 IST)

மு க ஸ்டாலின் முதல் விராட் கோலி வரை… பல பிரபலங்களின் ப்ளு டிக்கை பிடுங்கிய டிவிட்டர்!

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கிய நிலையில் வணிக நோக்கில் பயன்படும் ப்ளூடிக் பெற்ற பயனாளர்களிடமிருந்து சந்தா வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் 20-ம் தேதிக்குள் ப்ளூடிக் பயனாளர்கள் சந்தா செலுத்த வேண்டும் என்றும் இல்லையேல் ப்ளூடிக் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஏற்கனவே ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் சந்தா செலுத்தாத ப்ளூடிக் பயனர்கள் தங்கள்  அங்கிகாரம் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என ட்விட்டர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 20ஆம் தேதி அவர் கடைசி கெடு தேதியை எலான் மஸ்க் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது இந்தியாவில் பல பிரபலங்களின் ப்ளூ டிக்கை நீக்கியுள்ளது டிவிட்டர் நிர்வாகம்.

அதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், விஜய், சிம்பு மற்றும் கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா என ஏராளமான பிரபலங்களின் கணக்குகளில் ப்ளூ டிக் இப்போது நீக்கப்பட்டுள்ளது.