திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (15:49 IST)

திரிஷா மற்றும் ஜெயம் ரவியின் ட்விட்டர் ப்ளூ டிக் காலி!... என்ன காரணம்?

தமிழ் சினிமாவில் நாயகிகளின் காலம் என்று பார்த்தால் 5 முதல் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அக்கா, அம்மா வேடத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகைதான் திரிஷா. சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இப்போது பொன்னியின் செல்வன் வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தினைக் கைப்பற்றிய எலான் மஸ்க், அதில் பல புதிய விதிமுறைகளைப் புகுத்தியுள்ளார். அதன்படி ப்ளு டிக்கிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும்.  இந்நிலையில் இப்போது திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் டிவிட்டருக்கான ப்ளு டிக் நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கட்டணத்தைக் கட்டவில்லையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என தெரியவில்லை.