வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (12:52 IST)

டுவிட்டரில் இனி 10,000 கேரக்டர்கள் வரை ட்வீட் செய்யலாம்: புதிய அம்சம் அறிமுகம்!

டுவிட்டரில் இனி 10,000 கேரக்டர்கள் வரை ட்வீட் செய்யலாம் என புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல புதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ப்ளூடிக் சேவை பயனர்களுக்கு மேலும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
 
 250 கேரக்டர்கள் மட்டுமே ட்விட் செய்ய வேண்டும் என்று தற்போது இருக்கும் நிலையில் கட்டணம் செலுத்தும் பயனர்கள் 4000 கேரக்டர் வரை தற்போது ட்விட் செய்ய முடிகிறது. இந்த நிலையில் கட்டணம் செலுத்தும் பயனர்கள் 10,000 கேரக்டர் வரை ட்விட் செய்யும் புதிய வசதி தற்போது அறிமுகம் ஆகிறது. மேலும் இந்த டிவிட்டை 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
 
ட்விட்டர் ப்ளூடிக் சேவையை அதிக பயனர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் ப்ளூடிக் பெறுவதற்கு மொபைல் போனுக்கு ரூ.900 வலைதளத்திற்கு 650 ரூபாய் என்று இந்தியாவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva