1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 13 மே 2024 (19:07 IST)

குஜராத் vs கொல்கத்தா… வானிலை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்!

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் போட்டிகளின் இறுதிகட்டத்தில் தற்போது ஒவ்வொரு போட்டியும் முக்கியமான போட்டியாக மாறியுள்ளது., கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இன்று நடக்கவுள்ள முக்கியமான போட்டியில் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்ட கொலகத்தா நைட் ரைடரஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது. ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைக்க இன்றைய போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது.

இந்நிலையில் அகமதாபாத்தில் போட்டி நடக்க உள்ள நிலையில் வானிலை காரணமாக டாஸ் போடுவது தாமதம் ஆகியுள்ளது. அங்கு மின்னல்கள் வெட்டுவதால் மழை பெய்யுமோ என்ற அச்சத்தில் மைதானத்தை படுதாக்கள் போட்டு மூடி வைத்துள்ளனர்.