1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 13 மே 2024 (15:10 IST)

இது என் கிரவுண்ட்… இங்க நான்தான் கிங்கு.. சேப்பாக்கம் மைதானத்தில் சாதனை படைத்த அஸ்வின்!

இந்திய அணியின் மூத்த பவுலரான அஸ்வின் தற்போது சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அதே போல ஐபில் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆனால் அஸ்வினுக்கு இந்த சீசன் மிகவும் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. சீசனில் 11 போட்டிகள் விளையாடியுள்ள அவர் ஏழு விக்கெட்கள் மட்டும் வீழ்த்தியுள்ளார்.  அவர் 258 பந்துகளுக்கு மேல் வீசியுள்ள நிலையில் ஓவருக்கு 8.5 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். அவரின் மோசமான ஐபிஎல் சீசனாக இந்த சீசன் அமைந்துள்ளது.

முதலில் சில போட்டிகளில் சொதப்பிய அஸ்வின் இப்போது ஃபார்முக்கு திரும்பியுள்ளார். நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அவர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் சேப்பாக்கம் மைதானத்தில் 50 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சி எஸ் கே அணியின் ப்ராவோ 44 ரன்களோடு இரண்டாமிடத்தில் இருக்கிறார்.