செவ்வாய், 18 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 12 மே 2024 (07:26 IST)

“இது சாதாரண இலக்குதான்… ஆனால் நாங்க சொதப்பிட்டோம்…” – மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

நேற்று நடந்த நடந்த 60 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டி நடந்த கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. இதனால் போட்டி 16 ஓவர் போட்டியாகக் குறைக்கப்பட்டது.

இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே சேர்த்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “எங்களுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்த போதும் நாங்கள் பேட்டிங்கில் சொதப்பிவிட்டோம். இந்த தோல்வி ஏற்றுக்கொள்ள கண்டிப்பாக கடினமாக உள்ளது. இந்த இலக்கு சராசரியாக எட்டக்கூடிய இலக்குதான். ஆனால் கே கே ஆர் பவுலர்கள் சரியான நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தினர். அடுத்த போட்டி குறித்து எந்த முன் யோசனையும் இல்லை. சிறந்த கிரிக்கெட்டை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுதான் தொடக்கம் முதலே விளையாடுகிறோம்” எனக் கூறியுள்ளார்.