1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. KKR won the match against MI and entered into Play off

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ப்ளே ஆஃப்க்கு முதல் ஆளாக சென்ற கே கே ஆர்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நேற்று நடந்த நடந்த 60 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டி நடந்த கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. இதனால் போட்டி 16 ஓவர் போட்டியாகக் குறைக்கப்பட்டது.

இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களும், நிதிஷ் ராணா 33 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் சார்பாக பும்ரா மற்றும் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே சேர்த்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியில் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப்க்கு சென்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
16 ஓவர் போட்டி.. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு.. 2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்த கேகேஆர்..!