எங்களுடைய அடுத்த இலக்கு 2027 ஒருநாள் உலகக்கோப்பை.. இப்போதே திட்டமிடும் காம்பீர்..!
2026 டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு, அடுத்த இலக்கான 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான திட்டமிடலை இந்திய அணி இப்போதே தொடங்கியுள்ளது.
அகமதாபாத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பேசிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், 2026 ஐபிஎல் சீசன் முடிவதற்குள் உலக கோப்பைக்கான வரைபடம் தயாராகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் 2027 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. அங்கிருக்கும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை கருத்தில் கொண்டு, அந்த சூழலுக்கு ஏற்ற வீரர்களை அடையாளம் காண்பதே தற்போதைய முக்கிய நோக்கம் என்று கம்பீர் கூறினார்.
ஐபிஎல் 2026-க்கும் உலகக் கோப்பைக்கும் இடையில் 25 முதல் 30 ஒருநாள் போட்டிகள் மட்டுமே இருப்பதால், முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அணியின் சூழல் குறித்து எழும் விமர்சனங்கள் தேவையற்றவை என்றும், வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Edited by Siva