தோற்காத இந்தியா ஜெயிக்காத ஆப்கானிஸ்தான் – இன்றைய வெற்றி யாருக்கு?

cricket
Last Modified சனி, 22 ஜூன் 2019 (14:33 IST)
இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மோத இருக்கின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை. இந்நிலையில் நடைபெறவிருக்கும் இப்போட்டியானது கவனம் பெறுகிறது.

இதுவரை விளையாடிய போட்டிகளில் இந்தியா விளையாடிய 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. நியூஸிலாந்துடன் ஆட வேண்டிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால் பாயிண்ட்ஸ் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதேசமயம் ஆப்கானிஸ்தான் இதுவரை விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை. மிக சிறந்த சுழல்பந்து வீச்சாளர்களை கொண்டிருந்தாலும் ரன்கள் பெறுவதில் சிக்கலை சந்திக்கிறது ஆப்கானிஸ்தான்.

இந்த நிலையில் நடைபெற இருக்கும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா கண்டிப்பாக வெற்றிபெறும் என உறுதியாக நம்பப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :