விஜய் பட டயலாக் பேசிய இலங்கை கிரிக்கெட் வீரர் – ட்விட்டரில் வைரல்

russel
Last Updated: சனி, 22 ஜூன் 2019 (13:40 IST)
நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வென்றதை குறித்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் அர்னால்ட் ட்விட்டரில் விஜய் பட டயலாக்கை பதிவிட்டுள்ளார்.

நேற்று நடந்த உலக கோப்பையில் இங்கிலாந்தை இலங்கை வெல்லவே முடியாது என்றிருந்த நிலையில் அபாரமான பந்துவீச்சினால் இங்கிலாந்தை நாலாபக்கமும் சிதறவிட்டு வெற்றிக்கொடி நாட்டியது இலங்கை அணி. இந்த வெற்றி குறித்து ட்விட்டரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் அர்னால்ட் “டேய் மார்கன், எப்போ வந்தோம்கிறது முக்கியம் இல்லடா, புல்லட் எப்படி எறங்குதுங்கிறதுதான் முக்கியம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் “ஹேப்பி பர்த் டே தளபதி. பிகில் போஸ்டர் சும்மா தெரிக்குது. தீபாவளி வரை காத்திருக்க முடியாது நண்பா” என கூறியுள்ளார்.

இவரது இந்த ட்வீட் தளபதி ரசிகர்கள் இடையேயும், கிரிக்கெட் ரசிகர்கள் இடையேயும் வைரலாக பரவி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :