வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2019 (19:41 IST)

கிரிக்கெட் மைதானத்தை காதல் மைதானமாக்கிய இளசுகள் – காதல் வீடியோ

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை உலகமே தீவிரமாக பார்த்து கொண்டிருந்த போது மைதானத்தில் காதலர் ஒருவர் தன் காதலியிடம் ப்ரபோஸ் செய்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

கடந்த 16ம் தேதி நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்றது. உலகமே ஆர்வமாய் பார்த்த அந்த ஆட்டத்தில் வழக்கம்போல இந்தியா வெற்றிபெற்றது. ஆட்டம் நடைபெற்ற அன்று மைதானத்தில் மற்றொரு சுவாரஸ்யமும் நடந்தது.

தனது காதலியை விளையாட்டை பார்க்க அழைத்து வந்திருக்கிறார் ஒருவர். மைதானத்தில் வைத்து அந்த பெண்ணிடம் தன் காதலை தெரிவித்து கையில் மோதிரத்தை மாட்டிவிடுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் தன் காதலனை தாவி கட்டியணைத்து முத்தமிடுகிறார். இதை அங்கே கிரிக்கெட் ஆட்டத்தை வீடியொ எடுத்த கேமராமேனும் தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒவ்வொரு காதலனும் தன் காதலியிடம் ஒவ்வோரு தருணத்தில் தன் காதலை தெரிவிப்பார்கள். இந்த காதலர்கள் மைதானத்தில் செய்த இந்த சம்பவம் கிரிக்கெட் மைதானத்தையே சிறிது நேரத்தில் காதல் மைதானமாக்கிவிட்டது.