ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (18:30 IST)

வெற்றியின் உச்சத்தில் டெல்லி, திணறும் ராஜஸ்தான்! – இன்றைய போட்டியில் வெல்வது யார்?

அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் மோத இருக்கின்றன.

இதுவரையிலான இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும். ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஐபிஎல் அட்டவணையிலும் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை அடையும் என்பதால் எதிர்பார்ப்பு உள்ளது. அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ரபாடா, தவான் என பேட்டிங், பவுலிங் இரண்டிலும் நல்ல ஃபார்மில் வீரர்கள் உள்ளனர்.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் சில சமயம் நன்றகாவும், பல சமயம் மோசமாகவும் விளையாடும் அணியாக உள்ளது. கிங்ஸ் லெவனுடனான ஆட்டத்தில் அசால்ட்டாக 200 ரன்களை தாண்டி சேஸ் செய்தவர்கள் அடுத்தடுத்த ஆட்டங்களில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரையிலான 5 போட்டிகளில் மூன்றில் தோல்வியும், இரண்டில் வெற்றியும் பெற்றுள்ளனர். அணியில் சஞ்சு சாம்சன், ஸ்மித், பட்லர் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். தெவாட்டியா ஆல்ரவுண்டராக நம்பிக்கை அளிக்கிறார். ஆர்ச்சர், டாம் கரன், உனாகட் ஆகியோர் பந்துவீச்சில் இந்த முறை நல்ல ரிசல்ட்டை காட்டினால் ரன் ரேட்டை குறைக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.